கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 34 கொள்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதன்போது, குறித்த காணியிலிருந்து 33 கொள்கலனில் டீசலும், 1 கொள்கலனில் பெற்றோலும், மற்றுமொரு கொள்கலனில் 25 லீற்றர் மதிக்கத்தக்க மண்ணெண்ணையும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.










