ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 31 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
போராட்டம் ஆரம்பமாகி நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், போராட்டக்களத்தில் ‘கேக்’ வெட்டி, போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
இப்போராட்டத்துக்கு நேற்றும் பல தரப்பினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
அதேவேளை, மக்களிடமிருந்து ஆட்சியாளர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் மீளப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தும் மனுவிலும் நேற்று கையொப்பம் திரட்டப்பட்டது.
அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெறும் போராட்டம் இன்று 15 ஆவது நாளாக தொடர்கின்றது.
