சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாத காரணத்தால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ‘ஸ்மார்ட்’ அட்டைகளுக்கு 600,000 யூரோக்கள் செலுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியிடம் பணம் இல்லாத நிலையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
புதிய சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் மற்றும் அட்டைகளை இற்றைப்படுத்துவதற்காக தற்பொழுது தற்காலிக அட்டைகள் வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது