அரசமைப்பு பேரவைக்கு சிறு கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறு கட்சிகளின் சார்பில் மேற்படி பேரவைக்கு இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும், சிறிதரனும் போட்டியிட்டனர்.
சிறிதரனுக்கு 11 வாக்குகளும், ஜீவன் தொண்டமானுக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் நடைபெற்ற வாக்கெடுப்பில், சிறிதரனுக்கு ஆதரவாக கஜேந்திரகுமார் எம்.பி. வாக்களித்தார். அவரின் வாக்கே தீர்மானம்மிக்கதாக அமைந்தது.
அதேவேளை, அரசியலமைப்பு பேரவைக்கு ஆளும்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அபு பக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சிறு கட்சிகள் சார்பாக இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அரசமைப்பு பேரவையில் பதவிநிலை உறுப்பினர்களாவர். ஜனாதிபதியின் சார்பில் பிரதிநிதியொருவரையும் நியமிக்க வேண்டும். சிவில் அமைப்புகளின் சார்பில் மூவர் நியமிக்கப்படவுள்ளனர்.
