ஒரு வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் புகையிரத நிலைய அதிபர்கள்

செவ்வாய்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ஒரு வார கால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன,

அமைச்சருடனான செவ்வாய்கிழமை கலந்துரையாடலில் நல்ல பதில் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

தீர்வு கிடைக்காவிட்டால் நாங்கள் ஒரு வார கால வேலைநிறுத்தத்தத்திற்கு எந்த நேரத்திலும் தயார் என்றும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles