சீன தயாரிப்பிலான 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாளை (04) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.
இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளது.
ஒரே நாளில் அதிகூடிய Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
குறித்த 04 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுடன் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.