உத்தேச ஒலி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளன.
எதிர்க்கட்சி கூட்டணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கூடியது.
இதன்போது உத்தேச சட்டமூலம் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
” நாட்டின் ஜனநாயகத்தின் எஞ்சிய பகுதியை அழிக்கும் நோக்கிலேயே குறித்த சட்டமூலத்தை அரசு கொண்டுவர உத்தேசித்துள்ளது.” என எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
இச்சட்டமூலத்தை தோற்கடிக்க நாடாளுமன்றத்துக்குள்ளும், அதற்கு வெளியிலும் எதிரணிகள் போராடும். நீதிமன்றத்தையும் நாடுவோம் எனவும் சஜித் குறிப்பிட்டார்.
