தோட்டத் தொழிலாளர்கள் மூவர் இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் சிங்காரவத்தை பிரிவில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மூவரே இன்று முற்பகல் 10 மணியளவில் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து தோட்ட அம்புலன்ஸ் வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையின் பின்னர் இருவர் வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.
10 மணிக்கு சம்பவம் நடைபெற்று 11 மணிக்கே அம்புலன்ஸ் வண்டி வந்ததாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்