கங்காணிமாருக்கு ‘டெப்’! கூட்டு ஒப்பந்த பேச்சு பெப்ரவரியில்!!

” தற்போது அமுலிலுள்ள பெருந்தோட்ட கூட்டு உடன்படிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் காலாவதியாகவுள்ளது. இதையடுத்து பெப்ரவரி மாதமளவில் புதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும். பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் டிசம்பரில் ஆரம்பிக்கப்படலாம்.” – என்று முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவராக பதவியேற்றிருக்கும் பாத்தியா புளுமுல்லை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மொத்த தேயிலை உற்பத்தியில் 25 சதவீதமே பெருந்தோட்டக் கம்பனிகளின் பொறுப்பில் இருந்தாலும் சிறு தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை விட கம்பனி தொழிலாளர்கள்தான் மேம்பட்ட நிலையில் இருக்கின்றனர். தான் பதவி வசிக்கும் காலத்தில் பெருந்தோட்ட செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டவுள்ளேன்.

எல்பிட்டிய பிளான்டேஷனுக்குக் கீழ்வரும் பெருந்தோட்டங்களில் நாம் படிப்படியாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்ப டுத்தி வருகிறோம்.

கங்காணிமாருக்கான பெரட்டுக்கள துண்டுக்குப் பதிலாக ‘டெப்’பை அவர்கள் பயன்படுத்தப் பழக்கிவருகிறோம். குறிப்பிட்ட பெரட்டுக்கான தொழிலாளர்களின் பெயர்களும் படங்களும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். யார் எந்த மலைக்கு செல்ல வேண்டும் என்பதை ‘டெப்’ பின் மூலம் கங்காணி தீர்மானிப்பார். இதேபோல் இலத்திரணியல் நிறுவை இயந்திரங்களையும் அறிமுகம் செய்து வருகிறோம். ஒரு தொழிலாளியின் தேயிலை நிலுவை முடிந்ததும் எத்தனை கிலோ எனக் கணக்கிடப்பட்டு அவர் பெயரில் அவருக்கான பணம் பதிவு செய்யப்பட்டுவிடும்.

கல்வாத்து முறைக்கு பதிலாக ‘புரூனிங்’ இயந்திரங்களைப் பயன்படுத்தவுள்ளோம். தொழிலாளர்கள் என்போரை மெஷின் ஒபரேட்டர்களாக மாற்றவேண்டும். ” -என்றும் அவர் கூறினார்.

தேயிலைக் காணிகளைப் பிரித்து தொழிலாளர்களிடம் வழங்கும் வெளிவாரி முறை கைகொள்ளப்படுமா என்று அவரிடம் கேட்டபோது, அதுதான் சரியான வழியாகத் தோன்றுவது என்று குறிப்பிட்ட அவர்,

“தொழிற்சங்கங்களுடன் இது தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தளமொன்றை அமைத்துக்கொள்ள விரும்புகிறேம். ஏனெனில் தேயிலைக் கான கேள்வி உலகில் குறைவடையப் போவதில்லை. உலகிலேயே தண்ணீரை விட விலை குறைவான பானம் என்றால் அது தேநீர்தான் என்று துரைமார் சங்கத்தின் புதிய தலைவர் பாத்தியா புளுமுல்ல கூறினார்.

Related Articles

Latest Articles