கங்காரு கட்சி வேட்பாளர்கள் இருவர் திகாவுடன் சங்கமம்!

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கங்காரு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளர்கள் இருவர், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
கே ஆர் கிஷான் தலைமையில் இலங்கை தொழிலாளர் கட்சி நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. தலைவருடனான கொள்கை முரண்பாட்டினையடுத்தே  பொன்னுசாமி ஞானசேகரன், மோகனசுந்தரன் சஞ்சித் எடோன்சன்  இருவர்  இந்த முடிவினை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (23.07.2020) ஹட்டன் சாரதா மஹால் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்தனர்.
மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் 300 பேர்  முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தோடு இணையும் நிகழ்விலே இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளர்களும் இணைந்து ஆதரவினை தெரிவித்தமை குறிப்பிடத்தத்தக்கது.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles