யாழ். கோப்பாய் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27, 45 மற்றும் 46 வயதுகளுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் கோப்பாய் பொலிஸ் பிரிவில், திருநெல்வேலி சந்தையில் செருப்பு தைப்பவர் கசிப்பு வியாபாரத்தில் மறைமுகமாக ஈடுபட்டிருந்தபோது யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர் இன்னொரு இடத்தில் தொகையாக வாங்கி வந்து தினமும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார் என தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் உதவியுடன் விற்பனை செய்யும் இடத்தை சுற்றிவளைத்த பொழுது, கோப்பாய் மத்தி சூசியப்பர் கோவிலடியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 19லீற்றர் கசிப்பு மீட்கபட்டுள்ளது.
