கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
39 வயதுடைய எல்டப் கீழ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்டப் கீழ் பிரிவில் நபர் ஒருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவொன்று குறித்த இடத்துக்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை கைதுசெய்துள்ளதாகவும் அவரிடம் இருந்து 3750 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரட்ண தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ரட்ணாயக்க. 37118 சாஜன் உபுல்.
39315 சாஜன் நிரஞ்சன். 68558 சாஜன் சமில். 54251 சாஜன் செனவிரட்ண ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா










