கஜேந்திரகுமார் எம்.பிக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்……

யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ருவிட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் நாளை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் எனப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளேன்.

சபாநாயகரைத் தொடர்புகொள்ள முயன்றேன்; எனினும், தொடர்புகொள்ள முடியவில்லை. பிரதி சபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன்” – என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles