‘கஜேந்திரகுமார் எம்.பியின் வீடு சுற்றிவளைப்பு’ குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

“மக்கள் பிரதிநிதிகளே நாடாளு மன்ற உறுப்பினர்கள். அவர்களின் உயிர்களுக்கு அல்லது அவர்களின் வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒரு போதும் இடமளியேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் கொழும்பு வீடு முன்பாக நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையிலேயே ஜனாதிபதி மேற்படிக் கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் –

“எங்கு பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றதோ அங்கு பொலிஸாரையும் படையினரையும் வரவழைத்துப் பாதுகாப்பைப் பலப்படுத்துவேன்.

தற்போது சில தரப்பினர் எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துகின்றனர். எம்.பிக்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. எனினும், எம்.பிக்களின் உயிர்களுக்கும், அவர்களின் வீடுகளுக்கும் ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles