” கஜேந்திரகுமார் எம்.பி. தொடர்பான நிலைவரம் பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகள் எனக்கு தெரியப்படுத்தினர். கைது நடவடிக்கை பற்றியும் எனக்கு தெளிவுபடுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு சபை அமர்வில் பங்கேற்கவுள்ள உரிமையை தடுக்க முடியாது என நான் சுட்டிக்காட்டினேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொலிஸார், பிரதி பொலிஸ்மா ஆகியோர் இன்று காலையும் எனக்கு அழைப்பை எடுத்தனர். கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை நாடாளுமன்றம் கொண்டுவந்துவிடுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதான் பொலிஸாரின் திட்டம். பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது. கைது செய்யப்பட்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியது அவர்களின் பொறுப்பாகும்.”
– இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.










