ஆட்டோவில் கஞ்சா கடத்தில் இருவரை பசறைப் பொலிஸார் இன்று (25) கைது செய்துள்ளனர்.
ஆட்டோவொன்றில் கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாக பசறை பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஆலோசனையின் பிரகாரம் உதவி பொலிஸ் அதிகாரி இஷார தலைமையிலான குழுவினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு அனுப்பட்டனர்.
கமேவெலயிலிருந்து பசறை நோக்கி வந்துகொண்டிருந்த குறித்த ஆட்டோவை, வீதி சோதனை சாவடிக்கருகில் சென்று வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது ஆட்டோவில் இருந்த இளைஞர்கள் இருவரிடமிருந்தும் 5 கிராம் கஞ்சா போதைப்பொருளும் 17 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. 29, 30 வயதுகளையுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நமது நிருபர் – ராமு தனராஜா










