மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டமாருவ , இட்டினாம்பல கிராமத்தில் 7,8,9 அடி உயரங்களை உடைய 19 கஞ்சா செடிகளை சட்டவிரோதமாக பயிர் செய்து வளர்த்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரை மடுல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பசறை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலதிக விசாரணைகளை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.
பசறை நிருபர்