கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

பசறை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்காத்தன்ன பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் (வயது- 24) கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 3 ஆயிரத்து 100 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவரை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பசறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நிருபர் – ராமு தனராஜா

Related Articles

Latest Articles