குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கமையவே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையை உலுக்கிய முக்கிய பல சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
ஷானி அபேசேகர இதற்கு முன்னர் சிஐடியில் உயர் பதவி வகித்திருந்தார். முக்கிய பல சம்பவங்கள் தொடர்பில் அவர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். இதனால் அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி இருந்தார் எனவும் கூறப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பிணைமுறி மோசடி, கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தல், வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம், ஊடகவியலாளர் சிவராம் படுகொலை, சமூக செயற்பாட்டாளர்களான லலித், குகன் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.
11 மாணவர்கள் கடத்தல், வஷீம் தாஜுடின் கொலை உட்பட முக்கிய சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் ஷானி அபேசேகரவின் கண்காணிப்பின்கீழ் இடம்பெற்றுவருகின்றன.
