இவ்வருடத்தில் கடந்துள்ள 81 நாட்களில் மாத்திரம் நாட்டில் 483 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன . இவற்றில் 508 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், கடந்த 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற விபத்துகளில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
போர்காலத்தைவிடவும் தற்போது விபத்துகளால் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 9 பேர் உயிரிழக்கின்றனர். காயமடைபவர்களில் சிலர் உடல் அவயங்களை இழக்கின்றனர்.