ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சவாரியா சேத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் மூலவரான கிருஷ்ணருக்கு பக்தர் ஒருவர் வெள்ளி துப்பாக்கி மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூண்டு காணிக்கை அளித்தார்.
இந்த இரண்டும் சேர்ந்து சுமார் அரை கிலோ எடை கொண்டவை.
கடவுளுக்கு ஆயுதம் காணிக்கையாக வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கோவில் தலைவர் ஜானகி தாஸ் கூறினார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தானில் பூண்டின் விலை கடுமையாக அதிகரித்தது.பூண்டு பயிரில் இருந்து சில விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டினர். அதனால் வெள்ளி துப்பாக்கி, பூண்டு ஆகியவற்றை இறைவனுக்கு வழங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வெவ்வேறு பரிசுகளை வழங்குவது இது முதல் முறை அல்ல.கடந்த காலங்களில் வெள்ளி பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி மற்றும் ஐபோன் போன்ற பரிசுகள் வந்துள்ளன. இங்குள்ள கிருஷ்ணர் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என தெரிவித்தனர்.