நடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடித்து வருகிறார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாக உருவாக்கப்படும் என்றும் இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குவார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதால் படத்துக்கு 800 என்று பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமை என்று விஜய் சேதுபதியும் கூறியிருந்தார்.
வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஈழ தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா அல்லது விலகி விடுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் எதிர்ப்பை மீறி படத்தில் நடிக்க விஜய்சேதுபதி முடிவு செய்து இருப்பதாகவும் திரைக்கதை தயாராகி விட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இசையமைப்பாளராக சாம்.சி.எஸ்.ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் பட வேலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.