நுவரெலியா மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பெய்துவரும் கடும் மழையால் கென்யோன் நீர் மின் நிலைய நீர் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 3 அங்குலம்வரை திறந்துவிடப்பட்டுள்ளன.
அத்துடன், விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதால் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
இதனால் தாழ் நிலப் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர்










