கடும் மழையால் நுவரெலியா, கந்தபளை பகுதியில் தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்று புதன்கிழமை (27) இரவு பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ – நுவரெலியா ஊடான போக்குவரத்து தடைபட்டது.
கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் சில வீதிகள் சேதமடைந்துள்ளன.
சில பிரதான வீதி பகுதிகளில் முற்றாக வெள்ள நீர் தேங்கியுள்ளது. வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.
அத்துடன் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்தபளை பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா நிருபர்
