மலையகத்தில் தொடரும் பெரும் மழை காரணமாக இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் பெருக்கெடுத்து வருவதால் இவற்றில் பொழுதுபோக்குவதை, நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இப்பிரதேசவாசிகள் பொது மக்களை அறிவுறுத்துகின்றனர்.
இளைஞர்கள் இவற்றில் உல்லாசமாக நீராட வருவதால் ஆபத்துக்களில் சிக்கி உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. எனவே இத்தினங்களில் இப்பிரதேச நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் சிவனொளிபாத மலை யாத்திரை நிறைவு பெறும் இத்தினங்க ளில் பக்தர்கள் இரத்தினபுரி வழியில் சிவனொளிபாதமலை செல்லும் யாத்திரிகர்கள் களுகங்கை உட்பட பல நீர்நிலைகளில் நீராடுவோர் கவனயீனம் காரணமாக உயிராபத்துக்களை எதிர்கொள்கின்றனர் என இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கிறது.