வெள்ளம் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி பிரதேச கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இன்று காப்பீட்டு பிரார்த்தனையுடன் நிதி உதவி மற்றும் பொருள் உதவி வழங்கி வைக்கப்பட்டது .

இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும் எங்களால் ஒரு சிலருக்கே வழங்க முடிந்தது.

ஏனையவர்களுக்கும் கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது..
ஆசிரியர் மாணவர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுத்த ஆசிரிய உள்ளங்களுக்கும் உதவி செய்த உள்ளங்களுக்கும் எமது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் பெ.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் உடு துணிகள் வழங்க பட்டது.










