நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துவருகின்றது.
இதன்படி மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்து உள்ளது.அதே போல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்து உள்ளது.
மேல் கொத்மலை, கென்யோன்,லக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, நவலக்சபான, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










