தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) நடைபெறவுள்ளது.
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பிலும் அதற்கான வழிமுறைகள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளது.
அதேவேளை, ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவும் பட்சத்தில், அப்பகுதி முடக்கப்டுமானால் அப்பகுதிகளுக்கு பிரிதொரு நாளில் தேர்தல் நடத்தப்படும். ஆனால், அவ்வாறானதொரு நிலை ஏற்படாது என நம்புகின்றோம் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.