பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று(27) நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகளுக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெறும் நோக்கில் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் நாளை(28) நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் நாளை(28) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தௌிவுடுப்பத்துவதற்காகவே இந்த கூட்டம் என ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.










