கட்சி மற்றும் தொழிற்சங்க உறுப்பிரிமையில் இருந்து ஜெகநாதன் யோகநாதன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தொழிலாளர் தேசிய முன்னணி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் நுவரெலியா பிரதேச சபையில் பீற்று வட்டாரத்தில் போட்டியிட்டு வட்டாரத்தில் முதன்மை வேட்பாளராக வெற்றி பெற்ற தான், இன்று வரை தனது சேவையை செவ்வனே செய்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதிலும் அன்மைய காலங்களில் குறிப்பாக கடந்த பொது தேர்தலின் பின்னரான காலத்தில் கட்சி மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனவும் தான்தோன்றித்தனமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சிலமாதங்களாக ஆழ்ந்த சிந்தனையின் பின் இன்று முதல் தொழிலாளர் தேசிய முன்னணியினதும் தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் உறுப்புரமையில் இருந்து விலகும் முடிவினை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை அமைப்புகளின் தலைமைத்துவத்துக்கும் பொதுச்செயலாளர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளதாகவும், அடுத்த அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் அறிவிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
– நீலமேகம் பிரசாந்த்
#lka #மலையகம் #தமிழ் செய்திகள், #இலங்கைச் செய்திகள் #மலையககுருவி #குருவி