துருக்கியில் கட்டட நிர்மாண விதிமுறைகளை செயற்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளே பல கட்டடங்களும் பூகம்பத்தில் இடிந்துவிழக் காரணமாகி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
துருக்கியில் 2018இல் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கட்டட நிர்மாண விதிகள் கடுமையாக்கப்பட்டன. நாட்டின் தென்மேற்கில் 17,000 பேர் கொல்லப்பட்ட 1999ஆம் ஆண்டு பூகம்பத்தின் பின்னரும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
எனினும் கட்டட நிர்மாண விதிகளில் காலத்துக்குக் காலம் வழங்கப்பட்ட தளர்வுகள் தற்போதைய அனர்த்தத்திற்குக் காரணம் என்று நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தெற்கு துருக்கியின் பூகம்ப வலயத்தில் 75,000 வரையான கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக துருக்கி பொறியியலாளர் மற்றும் கட்டட கலைஞர்களின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.