கட்டணம் செலுத்தப்படாது துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எரிபொருள் கப்பல்கள்

கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் மூன்று எரிபொருள் கப்பல்கள் தொடர்ந்தும் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன.

இலங்கையை வந்தடைந்த 100,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பலொன்று கடந்த 23 ஆம் திகதி முதல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளது.

76,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய மேலும் இரண்டு  கப்பல்கள் பல நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கப்பல்களுக்காண கட்டணத்தை  செலுத்துவது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சிடம் வினவியபோது,
உடனடியாக கட்டணத்தை செலுத்த  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles