கந்தகெடிய பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் துப்பாக்கி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கலா உல்பத சந்துன் வகாவ பகுதிக்கு சோதனை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் குழுவினர் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த காட்டுப் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்த நிலையில் மீகாகியூல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய அக்கலா உல்பத சந்துன் வகாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா










