கட்டுநாயக்கவில் சிக்கிய 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறந்து விட்டு சென்ற பயணப் பொதியில் 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் இருந்ததை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கனடாவில் இருந்து கடந்த நவம்பர் 14 ஆம் திகதி பிற்பகல் 02.40 மணியளவில் டுபாய்க்கு கொண்டு வந்து அங்கிருந்து இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பான தகவல் மேல்மாகாண புலனாய்வு தகவல் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்களும் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த பயணப் பொதிகளில் 19 கிலோ 588 கிராம் குஷ் போதை பொருள் இருந்ததாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குஷ் போதை பொருள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

அத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles