கட்டுநாயக்க விமான நிலைய சம்பவம்: இந்திய தூதரகம் கூறுவது என்ன?

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையுடன் இந்திய நிறுவனங்கள் தொடர்புபடவில்லை என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

“ கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றமை தொடர்பாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும். இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles