கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் உலகின் பல நாடுகளில் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்து தப்பிக் கொள்வதற்காக உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டை மூடி வைப்பதில் எவ்வித பயனும் இல்லை என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles