கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஐபி முனையத்தில் விசேட ‘ஸ்கேனிங்’ இயந்திரம் – ஜனாதிபதி பணிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர் பயணிகள் (விஐபி) முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விஐபி முனையத்தின் ஊடாக சட்டவிரோதமான பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், விசேட பயணிகள் மற்றும் பிரமுகர்களுக்கான புறப்பாடு முனையத்தில் இந்த சாதனங்களை நிறுவுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

முஸ்லிம் தேசியக் கூட்டணியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கம் மற்றும் தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்தே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles