கட்டுப்பாட்டு விலையைமீறி அரிசி விற்ற நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமை தொடர்பில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அம்பாறை பிரதேசத்திலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ரூ. 500,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்படுபவர், அம்பாறை, டி. எஸ். சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் முகாமையாளராவார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் 2026 ஜூன் 15 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இந்தச் சட்ட மீறல் கண்டறியப்பட்டது.

இதன்போது இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராமிற்கான நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை ரூ. 255/- ஆக இருந்த நிலையில், அதே அரிசி இரண்டு கிலோகிராம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு ரூ. 560/-க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

அதன்படி, ஒரு கிலோகிராம் அரிசி ரூ. 280/-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்ததுடன், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட ஒரு கிலோகிராமிற்கு ரூ. 25/- அதிகமாக அறவிடப்பட்டிருந்தது. இரண்டு கிலோகிராம் அரிசிக்காக அதிகமாக அறவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ. 50/- ஆகும்.

2025 ஒக்டோபர் 21 ஆம் திகதிய 2459/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 94 ஆம் இலக்க கட்டளையின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராமிற்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ. 255/- ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கட்டளையை மீறியமை தொடர்பில் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் உரிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளினால் கொள்வனவு செய்யப்பட்ட அரிசிப் பொதி, கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய பணம் மற்றும் பற்றுச்சீட்டு உள்ளிட்ட வழக்குப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை நீதவான் நீதிமன்றத்தினால் 2026 ஒக்டோபர் 22 ஆம் திகதி இந்த வழக்கு தொடர்பில் ரூ. 500,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைகளை நடைமுறைப்படுத்துதல், நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுக்காக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

📞 அதிகபட்ச சில்லறை விலையை மீறிப் பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles