கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பேலிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கணவனின் கத்திக் குத்திற்கு இலக்காகி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கணவன்-மனைவிக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கத்திக்குத்து இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 38வயதான பெண் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
