கண்டியில் நடைபெற்ற இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் முற்றாக நிராகரிப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம்  கையளிப்பதற்காக கடந்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இராஜதந்திர நிகழ்வு தொடர்பில்  சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்கள் குறித்து  ஜனாதிபதி அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு  வரப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு வருகை தந்த இராஜதந்திரிகள்   இலங்கை பொலிஸாரின் விசேட பாதுகாப்புடன் காரில் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பிலும் சிலர் விமர்சித்துள்ளனர்.

பெப்ரவரி 04 ஆம் திகதி  நாட்டின் 75 ஆவது தேசிய சுதந்திர தினம் ஆகையால் அதனை முன்னிட்டு பல விசேட நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின்  தலைமையில் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதனுடன் இணைந்ததாகவே இந்த நிகழ்வும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்   நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

1961 இல் ஏற்படுத்தப்பட்ட  இராஜதந்திர உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கை உட்பட உலகின் நாகரீக நாடுகளின் பாரம்பரியத்தை மதித்து, தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தங்கள் நற்சான்றிதழ்களை கையளிக்க வரும்போது அவர்களுக்கு இராஜதந்திர ரீதியிலான கௌரவத்தை வழங்க வேண்டியது இலங்கையில் ஆட்சியிலுள்ள எந்த ஒரு அரசாங்கத்தினதும் பொறுப்பாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் தவறான தகவல்களை பரப்பும் முயற்சியை ஜனாதிபதி அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
04-02-2023

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles