கண்டியில் புதிய அமைப்பாளரை களமிறங்கியது இதொகா!

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா வின் புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்றைய தினம்(08) நியமிக்கப்பட்டுள்ளார்.

இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் இன்றைய தினம்(08) கூடிய கட்சி உயர்பீட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிளவிய மேற்படியான அமைப்பாளர் பதவியின் வெற்றிடத்தினை பூர்த்தி செய்வதற்காக கடந்த 24 மணித்தியாளத்திற்குள் இ.தொ.கா தலைமைகளால் பூர்த்தி செய்துள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டக்கூடியதாக அமைந்துள்ளது.

மேலும் பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் என்பவர் ஒரு இளந் தலைமுறையினை சார்ந்தவர் மாத்திரமன்றி, கடந்த காலங்களில் கண்டி மாவட்டத்திற்காக இ.தொ.கா இளைஞர் அணியின் சிரேஷ்ட அமைப்பாளராகவும் தனது கடைமையினை சிறப்பாக செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தகதாகும்.

மேற்படி இந்நியமனமானது இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

Latest Articles