கண்டியில் 400 மில்லியன் ரூபா செலவில் 4 தேசிய பாடசாலைகள்!

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம் முழுவதும் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும், செயற்படுத்த வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ‘சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழு’ நேற்று (2020.11.14) கண்டி மாவட்ட செலயக காரியாலயத்தில் கூடியது.

புதிய அரசாங்கம் பௌதீக வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்று மனித வள அபிவிருத்தி என்பவற்றை நோக்காக கொண்டு இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தை ஆரம்பித்து செயற்படுத்துவதுடன், இன்று நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அந்தந்த அமைச்சுக்களின் சார்பில் கண்டி மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள பல வேலைத்திட்டங்கள் தொடர்பில் கீழ்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கல்வி

•கண்டி மாவட்டத்தில் தலா 100 மில்லியன் ரூபாய் வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

•  ஏ.ரத்நாயக்க விளையாட்டு பாடசாலையை மேம்படுத்தி அடுத்த ஆண்டில் காடசாலைக்குள் தங்குமிட வசதிகளுடன் தரம் 8 இற்காக டெலண்ட் ஐடின்டிஃபிகேஷன் வேலைத்திட்டமொன்றின் கீழ் விளையாட்டில் திறமைவாய்ந்த 35 பிள்ளைகளை இணைத்து கொள்வதுடன்,

ஒரு பிள்ளைக்கு தலா 10,000 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்து அவர்கள் விளையாட்டுத்துறையில் தேசிய மட்டத்திலிருந்து சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டில் அப்பாடசாலையில் 130 மீட்டர் செயற்கை ஓடும் பாதையை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

•அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் பல்வேறு திட்டங்கள் ஊடாக ஒரு பில்லியன் ரூபாய் முதலீட்டை வளல ஏ.ரத்நாயக்க விளையாட்டு பாடசாலைக்கு ஈடுபடுத்துவதற்கு தயாராக இருப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மாவட்டத்தில் ஆசிரியர் இருப்பு மிகவும் திறனற்றதாக இருப்பதால் தேசிய அளவில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை வகுக்க முன்மொழியப்பட்டது.

•கண்டியில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் காணப்படும் நெருக்கடியை தீர்ப்பதற்கு வெளி மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

•கஷ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் ஆசிரியர்கள் அங்கு நீடித்திருக்காமைக்கு முக்கிய காரணம் அவர்களுக்கு தங்குவதற்கு பொருத்தமான இடம் இல்லாமையாகும். இப்பிரச்சினைக்கு தீர்வாக தேவையுள்ள பாடசாலைகளை அடையாளங்கண்டு ஆசிரியர் தங்குமிடங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டது.

மகளிர் மற்றும் குழந்தைகள்

•கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 2000 ரூபாய் ஊட்டச்சத்து பொதியை 10 மாதங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

•குழந்தை பருவ வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி கண்டி மாவட்டம் முழுவதும் தேசிய கொள்கையுடன் பல திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

•அரசு மற்றும் தனியார் துறை இணைந்து மகளிர் மற்றும் குழந்தை பராமரிப்பு திட்டங்கள் கண்டி மாவட்டத்தில் செயற்படுத்தப்படுவதுடன், 1938 மகளிர் உதவி மற்றும் ஆலோசனை சேவைகள் அவசர பிரிவு 24 மணி நேரமும் இயங்குகிறது.

கல்வி சேவைகள்

•கண்டி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு முன்பள்ளி மற்றும் ஒரு பகல்நேர பராமரிப்பு மையத்தை வழங்க ஏற்பாடுகள் செய்வதுடன், வெளிப்புற குழந்தைகள் பூங்காவும் இதில் உள்ளடங்கும்.

•கழிப்பறைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி இல்லாத அனைத்து பாடசாலைகளுக்கும் அவ்வசதிகளை இவ்வாண்டு பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், அதன்படி 2021 முதல் இலங்கையில் ஒவ்வொரு பாடசாலையிலும் மேற்கண்ட வசதிகள் பூர்த்தி செய்யப்படும்.

•டிசம்பர் 25 க்கு முன்னர் பாடசாலை பிள்ளைகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகளை வழங்குதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

சுகாதாரம்

•தோட்ட மருத்துவமனைகளை அரசிற்கு கையகப்படுத்துவதில் கண்டி மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், 2021 ஏப்ரல் மாதம் கண்டி மாவட்டத்தில் தாதியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

•தெல்தெனிய வைத்தியசாலையை கொவிட் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், பொதுவான நோய்களுக்கு சிகிச்சை பெறும் மக்களுக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

•கண்டி மருத்துவமனையில் தற்போது இரண்டு பி.சி.ஆர் இயந்திரங்களால் கொவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் புதிய பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles