கண்டி, கேகாலை, மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

அதிக மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர், பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.

இதனால், கண்டி மாவட்டத்தின் உடுநுவர, தெல்தோட்ட, கங்கவட்டகோரல, யட்டிநுவர, தும்பனே, தொலுவ, மெததும்பர மற்றும் பஹத்ததும்பர ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல மற்றும் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்க மற்றும் ரத்தோட்டை பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles