கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கொஹொம்பிலிவெல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
வேகமாக பயணித்துக்கொண்டிருந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே மோட்டார் சைக்களில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
காரில் இருந்தவர்கள் காயமடைந்துள்ளனர்.
