கண்டி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வழங்கிவருகின்றார்.
இ.தொ.காவின் உப செயலாளரும் , பிரஜாஷக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமியின் வேண்டுகோளுக்கு அமைவாகவே குறித்த நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பாரத் கருத்து தெரிவிக்கையில் ,
” கண்டி மாவட்டத்தில் தனிமை படுத்த பட்ட பகுதிகளில் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கும் குடும்பங்களின் வீடுகளுக்கே இந் நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்த வண்ணம் உள்ளோம் . அந்த வகையில் அம்பக்கோட்டை அலுத்வத்தை, கெங்கள, ரங்கள, பன்வில, தெல்தோட்டை, கெலபோக்க, கலஹா போன்ற பகுதிகளில் எமது முன்கள பணியாளர்கள் மூலமாக பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
அதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக:கு கண்டி வாழ் மக்கள் சார்பாக நான் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். ” -என்றார்.


