இலங்கையின் முன்னணி சமூக சேவை நிறுவனங்களில் ஒன்றான லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனம், தற்போது பல சமூக தொண்டு வேலைகளை நேர்த்திகரமாக செய்து வருகிறது.
இதற்கமைய லங்கா விஷன் ஆக்சன் பவுண்டேஷனின் பிரத்தியேக வேலை திட்டங்களில் ஒன்றான கல்வி சார் சமூகத்தை கட்டி எழுப்பும் செயற்திட்டத்தின் ஊடாக (2023.01.04) அன்று கண்டி D.S.சேனாநாயக்க பொது நூலகத்திற்கு சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதிமிக்க புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் லங்கா விஷன் ஆக்சன் பவுண்டேஷனின் தலைமை நிர்வாகி திருமதி.கீர்த்தனா தர்ஷன் கலந்து கொண்டதுடன்,குறித்த பெறுமதியான புத்தகப் பொதிகளை, D.S.சேனாநாயக்க தலைமை நூலகர் திருமதி.ஹேரத்திடம் வழங்கி வைத்தார்.
குறித்த புத்தகப்பொதிகளில் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் எழுத்து உருவாக்கப்பட்ட கதை, நாவல்கள், சிறுகதை,கவிதை, வரலாற்று நூல்கள் அடங்கிய புத்தகதொகுதி வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










