‘கதவு திறந்தே உள்ளது – யாரும் வரலாம்’ – மலையக தொழிலாளர் முன்னணி

”  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க பிரச்சனைகளில் இதுவரை 3,188 பிரச்சனைகளை மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணி ஊடாக தீர்த்து வைத்துள்ளது.” – என்று முன்னணியின் பொதுச்செயலாளர் க.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” மலையகத்தில் காணப்படும் 28 காரியாலயங்களும் 106 தொழிற்சங்க உத்தியோகத்தர்களும் மக்களின் நலனுக்காக சேவை செய்து வருகின்றனர். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணனின் சிறப்பான தலைமைத்துவத்தின்கீழ் எவ்வித உத்தியோகத்தர்களும் பணிநீக்கமின்றி செவ்வனே சேவை செய்து, மக்களின் தொழிற்சங்க பிரச்சனைகளை தீர்ப்பதில் மும்முரமாக செயற்படுகின்றனர்.

மேலும் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிய விசேட படையணி நியமிக்கப்பட்டுள்ளதோடு இதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை தேடியறிவது மட்டுமல்லாமல் தேடிவரும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா ராகலை பிராந்திய இயக்குனரான செல்வராகவன், அக்கரப்பத்தனை பிராந்திய இயக்குனரான நடராஜா,
தலவாக்கலை பிராந்திய இயக்குனரான வரதராஜா, ஹட்டன் பிராந்திய இயக்குனரான கனகராஜா, நோர்வூட் பிராந்திய இயக்குனரான விஜயகுமார் ஆகியோர்களை மக்கள் தொடர்புகொள்ளும் பட்சத்தில் பிரச்சனைகளை தீர்க்க தொழிற்சங்கம் நடவடிக்கை எடுக்கும்.

அதுமட்டுமல்லாது மலையக மக்கள் முன்னணியின் காரியாலய கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.யாரும் வரலாம் , கட்சி பேதமின்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்க மலையக மக்கள் முன்னணியும்,மலையக தொழிலாளர் முன்னணியும் தயாராக இருக்கின்றது.” – என்றார்.

நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles