கத்தார் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தம்மிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
காசாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பயன்படுத்திய கட்டடம் மீது அண்மையில் இஸ்ரேல் இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.
தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் தங்களின் சுதந்திரமான நடவடிக்கை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.
இஸ்ரேலின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘ இனி நெதன்யாகு , கத்தாரை தாக்க போவது இல்லை. தோஹா நல்ல நட்புடன் இருந்து வருகிறது. பலருக்கு இது தெரியாது என்று குறிப்பிட்டார்.
கத்தாரை தாக்குவதற்கு முன்னேரே இதுபற்றி அமெரிக்காவிடம் நெதன்யாகு தெரிவித்து விட்டார் என்று சர்வதேச முன்னணி ஊடகங்கள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன. இதற்கு பதில் அளித்திருந்த அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள், எங்களிடம் தெரிவிக்கவில்லை.
கத்தாரை நோக்கி தாக்குதலுக்காக ஏவப்பட்ட ஏவுகணைகள் வானில் பறந்து கொண்டிருந்த போது தகவல் வந்தது. இதனால் அடுத்து என்ன செய்வது, முடிவு எடுப்பது என்பதற்கான அவகாசம் கூட இல்லாமல் இருந்தது என்று கூறியிருந்தனர்.