பொலனறுவை, வெலிகந்த – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தி யசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத் துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இருவர் தப்பியோடியுள்ளனர் எனவும் வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள் ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் இருகுழுக்களுக்கிடையில் நேற்று மாலை 4.30 மணியளவில் மோதல் ஏற்பட்டது. அதனைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முற்பட்ட இராணுவத்தினரில் ஒருவரும், மோதலில் இந்த மோதல் சம்பவத் திதைப் பயன்படுத்தி கைதிகள் இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் எனவும், அவர்களைக் கைது செய்யப் பொலி ஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் வெலிக்கந்தை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
