நுவரெலியா, கந்தப்பளை நகரில் இன்று (08) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.
கந்தப்பளை, கொங்கோடியா கீழ் பிரிவைச் சேர்ந்த கந்தையா சந்திரகுமார் (வயது – 42) என்பவரே இவ்வாறு படுகாயம் அடைந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தப்பளை போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆ.ரமேஷ்